Saturday, 16 February 2013

4, வளமாக்கும் தெய்வம் 
                 
                    பொதுவாக அய்யனாரை பல இடங்களில் மழை மற்றும் நீர் வளத்திர்க்குமான தெய்வமாக வழிபடுகிறார்கள் அதற்கு தகுந்தார்போல் போல் அய்யனாரை வழிபடும் இடங்களில் நீர் வளமும் நில வளமும் செழிப்பாக காணப்படுகிறது அதாவது அய்யனார் கண்மாய்க்கரை வயல்வெளி குளக்கரை ஏரி அல்லது கிணறு அருகேதான் அய்யனார் குடி கொண்டு இருக்கிறார் என்பது தனிச்சிறப்பு  சில இடங்களில் பக்தர்கள் வயலில் விளையும் நெல்லில் முதல் அறுவடை முடிந்தவுடன் முதலில் அய்யனாருக்கு ஒருபடி நெல்லை காணிக்கையாக செழுத்தி பொங்கலிட்டு வணங்கி விட்டுத்தான் விற்பனையை தொடங்குகின்றனர்
3,கிழக்கு நோக்கி
 
                        பொதுவாக அய்யனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். வலக்கையில் சாட்டை அல்லது மலர்ச்செண்டு வைத்திருப்பார் சில இடங்களில் அபூர்வமாக வலக்கையில் அபயமுத்திரையுடன் அருள்பாலிக்கிறார் வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். சில இடங்களில் குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.

Friday, 15 February 2013

தலைமை தெய்வம் அய்யனார்
                 
                 தமிழகத்தின் காவல் தெய்வங்கள் என்றாலே முதலில் நாம் அனைவரின் நினைவுக்கு வருவது அய்யனார் தான் இருக்கும் இடம் எங்கும் தலைமை தெய்வமாகவும் முதைன்மைதெய்வமாகவும் அருளும் அய்யனாரின் வரலாறு. தமிழகத்தில்  அய்யனார் ஆதியில்  அமர்ந்த  இடமாக  கருதப்படுவது நெல்லை மாவட்டத்தின்  பாபநாசத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் இதுவே அய்யனாரின் ஆதி பிறப்பிடமாக கருதப்படுகிறது

அய்யனார் இருக்கும் இடம் யாவும் தலைமை ஏற்று இருக்கிறார் அய்யனாரின் தலைமை காவல்  தெய்வமாக(தளபதியாக) கருப்பசாமி அருள் புரிகிறார்

சில இடங்களில் அவர் தலைமை வகிக்கவில்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் தலைமையேற்று இருகின்றனர் அல்லது அய்யனார் தலைமை இல்லாததுக்கு வேறு ஏதேனும் கதை இருக்கிறது அல்லது முதல் பூஜை அய்யனாருக்கு செய்கிறார்கள்

அய்யானாரை  சில  இடங்களில் சாஸ்தா வாகவும் வழிபடுகிறார்கள்

பொதுவாக  அய்யனாருக்கு பலி கொடுப்பது கிடையாது ஆனால் சில கோவில்களில் பலி கொடுக்கிறர்கள் ஆனால் தை அய்யனாரின் பரிவார தெய்வங்கள்  எற்றுக்கொள்வதாக  ஐதீகம்
அய்யனே சரணம்

          கடந்த  இரண்டு மூன்று  ஆண்டுகளாகவே  இந்த அய்யனாரை பற்றிய வரலாற்று தொகுப்பை எழுத முயற்சித்து  வருகிறேன் தகவல்  தெரிந்த அளவுக்கு  அதை  எளிய  நடையில் எழுத்தத் தெரியவில்லை  இருந்தாலும் அய்யனின் அருளால்   தற்போது  எனக்கு தெரிந்த நடையில்  எழுதுகிரேன் தவறேதும்  இருந்தால்   பக்தகோடிகள்   வலைதல  நண்பர்கள்   பொறுத்து அருளவும் ,
நான் இந்த வலை தலத்தில் அய்யனாரை பற்றி மட்டும் எழுத காரணம் என் வீ ட்டில் பெரியவர்கள் என் சிறுவயதுமுதல் அய்யனாரின்  கதைகளை ஆழமாக சொல்லி சொல்லி அவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்துள்ளனர் அது மட்டுமல்ல என் குலதெய்வம் கரையடி காத்த அய்யனாரின் பூசை பொருள்கள் மற்றும் பூசை பொறுப்பு எங்கள் வீட்டு பொறுப்பில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்,  

அய்யனின் புகழைபாடுவோம்    அய்யனின் அருள்பெருவோம்

அய்யனே சரணம் ! அய்யனே சரணம் ! அய்யனே சரணம் !